வெளியே செல்வதற்கு முன்பாக லாஸ்லியாவிடம் கவின் கொடுத்த அந்த பொருள் என்ன தெரியுமா?

0
3880
kavin-losliya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் 5 லட்சத்தை வாங்கி கொண்டு வெளியேறியுள்ளார் என்ற செய்தி தான் சமூக வலைதளத்தில் தற்போது பிக் பாஸ் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் கவின் எடுத்த இந்த முடிவு கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
kavin

இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே கவினுக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ஆதரவு இருந்து வந்தது. கவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு ஹேஷ்டெக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் #Weadmirekavin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் முதல் இடத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : கவின் குறித்து மறைமுக பதிவை போட்ட அபிராமி .! ரசிகர்கள் கடுப்பானதால் பின்னர் செய்த காரியத்தை பாருங்க.!

- Advertisement -

இத்தனை ஆதரவுகள் இருந்தும் கவின் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்ற மிகப்பெரிய கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புறம் இருக்க லாஸ்லியாவால் தான் கவின் கேமை சரியாக விளையாட முடியாமல் வெளியேறினார் என்ற ஒரு கருத்தும் சமூக வலைத்தளத்தில் வலுத்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல தான் இன்றைய ப்ரோமோவிலும் நடந்திருந்தது.

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமவில் கவின் வெளியேறுவதற்கு முன்பாக லாஸ்லியாவிடம் ஒரு புகைப்படம் ஒன்றை கொடுத்து அந்த போட்டோவை வைத்து பார் உனக்கு எல்லாம் ஞாபகம் வரும் என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகைப்படம் வேறு யாருடையதும் இல்லை, லாஸ்லியாவின் தந்தையின் புகைப்படம் தான். மேலும், அந்த புகைப்படத்திற்கு பின்னால் ஏதோ எழுத பட்டிருந்த விஷயத்தை கண்டு தான் கவின் மனமுடைந்து போனதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement