பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் சேரன் வெளியேறி இருந்தது ரசிகர்கள் பலருக்கும் மிகப்பெரிய ஷாக்காக அமைந்தது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நல்ல அனுபவத்தை கொண்டு செல்வதாக சேரன் கூறியிருந்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் போட்டியாளர்களுக்கு சவாலான டாஸ்க்கும் வழங்கப்படவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில்கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே, அதாவது இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டாஸ்க் நடைபெற்றுவந்தது. மேலும், இந்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் முகென் அதிக புள்ளிகளை பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றுள்ளார்.
இதையும் பாருங்க : குளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.! வாயடைத்து போன ரசிகர்கள்.!
இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் தர்ஷனிடம் பேசும் பிக்பாஸ், போட்டியாளர்கள் ஒருவரை காப்பாற்ற வேண்டுமென்றால் பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்றுடாஸ்க் கொடுத்து இருக்கிறார். மேலும், தர்ஷன் ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்ற பச்சைமிளகாயை சாப்பிட்டுள்ளார்.
எனவே,இந்த வாரம் நாமினேஷன் இருக்குமா இல்லையா என்று மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில்,கவினை காப்பற்ற லாஸ்லியாவை பச்சை மிளகாயை சாப்பிட சொல்கிறார் பிக் பாஸ். ஆனால், லாஸ்லியா இது என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை என்று யோசித்தபடி மிளகாயை வாயில் வைக்கிறார். இந்த கவின் காப்பாற்ற லாஸ்லியா இந்த டாஸ்கை செய்தாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.