இதனால் தான் கவினை லாஸ்லியா இன்னும் சந்திக்கவில்லை.. லாஸ்லியாவின் மழுப்பலான பதிலை பாருங்க..

0
14284
kavin-losliya
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தது போல் சிறப்பாக முடிவடைந்தது. மேலும், பிக் பாஸ் சீசன் 3ன் பட்டத்தை வென்றார் முகென். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிஞ்சவுடன் எல்லாருமே எதிர்பார்த்தது கவின், லாஸ்லியா காதல் குறித்து தான். ஆனால்,லாஸ்லியா கவினை தவிர மற்ற போட்டியாளர் அனைவரயும் சந்தித்து வருகிறார். அப்படி லாஸ்லியா கவினை சந்திக்காதற்கு காரணம் என்ன? என்று ரசிகர்கள் இணையங்களில் பல கேள்விகள் எழுப்பி வருகின்றன. இதைத் தொடர்ந்து பார்த்தால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கவின், லாஸ்லியா ஆகிய ரெண்டு பேரும் சேர்ந்து யாரையுமே சந்திக்கவில்லையாம். இதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
cheran losliya vanitha

மேலும், ரசிகர்கள் எல்லாருமே எதிர்பார்த்தது கவின் ,லாஸ்லியா வெளியே வந்தவுடன் நேரில் சந்தித்து தங்களுடைய காதலை உறுதி செய்து பேசுவாங்க என்று தான். ஆனால், அவர்கள் இருவரும் அந்த மாதிரி எந்த ஒரு நிகழ்ச்சியிலும்,நேரில் சந்தித்தோ பேசவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் சாண்டி பாய்ஸ் அணிக்கு விருந்து கொடுத்திருந்தார். இந்த விருந்தில் கவின்,முகென் , தர்ஷன் கலந்து கொண்டனர். ஆனால் லாஸ்லியா மட்டும் வரவே இல்ல. இதுகுறித்து லாஸ்லியாவிடம் கேட்டபோது நான் என்னுடைய குடும்பத்தாருடன் நேரம் ஒதுக்கி இருந்தேன். அதனால தான் என்னால பாய்ஸ் விருந்துக்கு வர முடியவில்லை.மேலும், இந்த விருந்தில் லாஸ்லியாவுக்கு பதில் அபிராமி கலந்து கொண்டார் என்ற தகவலும் வெளியானது. ஆனால், லாஸ்லியா மட்டும் தனியாக சாண்டியின் நடன பள்ளிக்கு சென்றிந்தார்.

இதையும் பாருங்க : நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீரா..

- Advertisement -

இதனைத்தொடர்ந்து வனிதா வீட்டில் நடந்த ஒரு விசேசத்திற்கும் லாஸ்லியா போயிருந்தாங்க. லாஸ்லியா மட்டும் இல்லைங்க சேரன், பாத்திமா பாபு ஆகியோர்களும் இந்த விஷேசத்தில் கலந்து கொண்டார்கள். மேலும் லாஸ்லியா, அபிராமி இருவரும் தனியாக செம்ம ஃபன் பண்ணிட்டு வந்து இருக்கிறார்களாம். இப்படி குடும்பத்துடன் மட்டும் தான் நேரம் ஒதுக்குகிறேன் என்று லாஸ்லியா கூறிய பதில் மழுப்பிய பதில் போல் உள்ளது. ஏன்னா அவங்க கவினை தவிர மத்த எல்லா போட்டியாளர்களையும் நேரில் சந்தித்து கொண்டாடி வருகிறார்கள். ஒருவேளை லாஸ்லியாவோட அப்பா கவினை பார்க்கக்கூடாது பேசக்கூடாது (கதைக்க கூடாது ) என்று கூறி இருப்பாரோ? என்ற கேள்விகளும் இணையங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.

Image result for kavin losliya

ஏன்னா லாஸ்லியா அப்பா,அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே செல்லும்போது அங்கு நடந்த பிரீஸ் ஸ்டாக்கில் பயங்கரமான அனல் தீயை லாஸ்லியா மீது வீசி கொண்டிருந்தார் லாஸ்லியாவின் தந்தை. “நீ இதுக்கு தான வந்த, என்னை இப்படி அசிங்க படுத்திட்டேயே என்று பயங்கரமாக திட்டி தீர்த்தார். அவருக்கு அப்பவே இவர்களுடைய காதலை எதிர்த்து இருந்தார். மேலும்,லாஸ்லியா வெளியே வந்தா சொல்லவா வேணும் கண்டிப்பாக அவர் பேச கூடாதுன்னு சொல்லி இருப்பாரு. அதோட இறுதிப்போட்டிக்கு நெருங்கும்போது லாஸ்லியா ஊடகம் முன்னாடி என் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். ஆனால்,வெளியே வந்தவுடன் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் தெரியப்படுத்தவில்லை. இதுபற்றி எதுவும் பேசாத அமைதியாக இருக்கிறார். கவின் கூட ஏன் அமைதியா இருக்கிறார்? ஒன்னும் புரியல. அப்ப அவங்க ரெண்டு பேரும் காதல் பிரேகப்பா ? இல்ல? மௌனம் சாதித்து ஜெயிக்கபோகிறார்களா ? போக போக தான் தெரியும். ஆனா, இவங்க ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement