கர்நாடகாவில் இருந்து வந்த எனக்கு கலாச்சாரம் இல்லையா.! மதுமிதா பக்கம் திரும்பும் சண்டை.!

0
4974

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பொம்மைக்காக ஆரம்பித்த சண்டை கலாச்சாரம் பேசும் அளவிற்கு போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் அபிராமிக்கு இடையே ஓடிக்கொண்டிருந்த ரொமான்ஸ் அனைவருக்கும் தெரியும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கவின் அபிராமிக்கு ஒரு வாட்டர் பாட்டிலை கொடுத்தார்.

அதனை தனது குழந்தை என்று பொத்தி பொத்தி பார்த்து வந்தார் அபிராமி. இந்த நிலையில் இன்று (ஜூன் 30 ) கமல், அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடம் பேசி கொண்டிருக்கும் போது பாத்திமா செய்தி வாசிப்பாளராக வீட்டில் இருந்த அணைத்து போட்டியாளர்களையும் விவரித்து வந்தார்.

- Advertisement -

அப்போது வாய் தவறி அபிராமி, கவினின் குழந்தையை வைத்திருக்கிறார் என்று என்னமோ கூறி விட்டார். ஆனால், அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் மதுமிதா இப்படி எல்லாம் செய்ய கூடாது நான் ஒரு தமிழ் பெண், எனக்கு தமிழ் கலாச்சாரம் தான் முக்கியம் என்று கூறிவிடுகிறார்.

அந்த ஒரு வார்த்தையால் ஆரம்பித்த சண்டை ஒட்டு மொத்த போட்டியாளர்களும் மதுமிதா பக்கம் திரும்பிவிட்டனர். அபிராமி கவின் கொடுத்த தண்ணீர் பாட்டிலை குழந்தை என்று விளையாட்டாக கூறுவதற்கும் கலாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் என்று அனைவரும் கேள்வி எழுப்பினர். குறிப்பாக அபிராமிக்காக, சாக்ஷயும் ஷெரினும் அபிராமிக்கு ஆதரவாக பேசினார்கள்.

-விளம்பரம்-

அதிலும் ஷெரின், தமிழ் பொண்ணு என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள் எங்களுக்கு எல்லாம் கலாச்சாரம் கிடையாதா. கர்நாடகாவில் இருந்து வந்த எனக்கு கலாச்சாரம் கிடையாதா என்று கடுமையாக பேசினார். இதைஎல்லாம் தாண்டி சாக்க்ஷி, தமிழ் பொண்ணுன்னு சொல்ற அப்புறம் ஏன் இதுமாதிரி மாடல் ஆடை அணிந்து கொள்கிறாய் என்று கேள்வி கேட்க செய்வதரியாது திகைத்து அமர்ந்து கொண்டிருந்தார் மதுமிதா.

Advertisement