பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் போட்ட உருக்கமான பதிவு.! ரசிகர்களின் கமெண்டை பாருங்க.!

0
12434
tharshan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது தான் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என்று அனைவரும் நினைத்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் விஜய் டிவி மீதும் பிக்பாஸ் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.தர்ஷன் வெளியேறியதால் ரெட் லைட் விஜய் டிவி என்ற ஹேஷ் டேகை கூட ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

View this post on Instagram

Love you all ❤️

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களும் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று ஆணித்தரமாக நம்பி வந்தார்கள் ஆனால் இப்படிப்பட்ட ஒரு போட்டியாளர் எப்படி வெளியேறினார் என்பதுதான் பலருக்கும் மிகப் பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. தர்ஷன் குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் யாரை முதலில் சந்தித்துள்ளார் பாருங்க.! வைரலாகும் புகைப்படம்.!

- Advertisement -

அதில், நமக்குத் தெரிந்த நபர்களிடமிருந்து அன்பை பெறுவது ஒரு நல்ல உணர்வு தான். ஆனால், நமக்குத் தெரியாத, நாம் சந்திக்காத நபர்களிடமிருந்து அன்பை பெறுவது அதைவிட சிறந்த உணர்வு. இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் மீது வைத்துள்ள அன்பையும் ஆதரவையும் நான் உணர்ந்துள்ளேன். இதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நான் பிக்பாஸ் இருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து இந்த 98 நாட்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளது என்னால் வார்த்தைகளால் கூற முடியாது. எனது மனம் முழுவதும் அன்பு நிலவி வருகிறது. விரைவில் உங்களை சந்திக்கிறேன் அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று தர்ஷன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

தர்ஷனின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் தர்ஷனுக்கு தங்களது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும், நீங்கள் தான் உண்மையான வெற்றியாளர் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். அதேபோல தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, மீண்டும் வந்ததற்கு உன்னை வரவேற்கிறேன். இது வெறும் ஆரம்பம் தான் இதை விட சிறந்தவை உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கமென்ட் செய்துள்ளார்.

Advertisement