பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் யாரை முதலில் சந்தித்துள்ளார் பாருங்க.! வைரலாகும் புகைப்படம்.!

0
37889
tharshan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது தான் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் தான் டைட்டில் வின்னர் என்று அனைவரும் நினைத்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் விஜய் டிவி மீதும் பிக்பாஸ் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.தர்ஷன் வெளியேறியதால் ரெட் லைட் விஜய் டிவி என்ற ஹேஷ் டேகை கூட ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்

-விளம்பரம்-

கடந்த வாரம் லாஸ்லியா, தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகிய நான்கு பேர்களும் நாமினேஷனில் இருந்து வந்த நிலையில் பலரும் ஷெரின் தான் வெளியேறுவார் என்று ஆணித்தரமாக நம்பி வந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேற்றப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டைட்டில் வின்னர் என்று பலரும் எண்ணி வந்த நிலையில் தற்போது அவரே வெளியேறி உள்ளார்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து வெளியேற்றபட்ட தர்ஷன்.! சேரன் போட்ட மிக உருக்கமான பதிவு.!

- Advertisement -

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களும் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று ஆணித்தரமாக நம்பி வந்தார்கள் ஆனால் இப்படிப்பட்ட ஒரு போட்டியாளர் எப்படி வெளியேறினார் என்பதுதான் பலருக்கும் மிகப் பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. தர்ஷன் குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது தர்ஷன் தனது காதலியான சனம் ஷெட்டியை சந்தித்துள்ளார் அந்த புகைப்படத்தை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும், அந்த பதிவில் உன்னை மீண்டும் வருக என்று கூறுவது சரியில்லை. நீதான் டைட்டிலை வின் செய்திருக்கவேண்டும் இருப்பினும் அங்கு உள்ளவர்களை விட நீ உலகத்தில் உள்ள பல்வேறு உள்ளங்களை வென்று விட்டாய். நான் சொல்லும்போது நீ நம்பவில்லை ஆனால் தற்போது நீ என்னை நம்புவாய். உனக்கான ஆச்சரியங்களும் காத்துக்கொண்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் வருத்தமான புகைப்படம் பிக்பாஸ் மோசம் செய்துவிட்டார். இருப்பினும் தொண்ணூத்தி எட்டு நாட்களுக்குப் பிறகு உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி நான் எதுவும் கூற முடியாமல் வாய் அடைத்து உள்ளேன் என்று பதிவிட்டு தனது மன வருத்தத்தை தெரிவித்துள்ளார் சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே சனம் ஷெட்டி தனக்கு ஆதரவாக பல்வேறு பதிவுகளை போட்டு வந்தார் சனம் ஷெட்டி, தர்ஷன் பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்து அந்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். பல்வேறு ரசிகர்கள் சனம் ஷெட்டி விளம்பரத்திற்காக தான் இதற்கு ஆதரவாக பேசி வருகிறார் என்று விமர்சித்த போதும் இறுதிவரை தர்ஷனுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாமல் இருந்துவந்தார் சனம் செட்டி. எனவேதான் தர்ஷன் வெளியில் சென்ற உடன் முதலில் சனம் ஷெட்டியை சந்தித்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

Advertisement