இதனால் தான் தர்ஷனுக்கு வாக்குகள் குறைந்தது.! காரணத்தை சொல்லி புலம்பும் ரசிகர்கள்.!

0
42680
tharshan-elimination

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டது தான் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் அல்லது முகென் தான் டைட்டில் என்று அனைவரும் நினைத்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் விஜய் டிவி மீதும் பிக்பாஸ் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். தர்ஷன் வெளியேறியதால் ரெட் லைட் விஜய் டிவி என்ற ஆசைகூட சமூக வலைத்தளத்தில் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களும் தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று ஆணித்தரமாக நம்பி வந்தார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு போட்டியாளர் எப்படி வெளியேறினார் என்பதுதான் பலருக்கும் மிகப் பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. கடந்த வாரம் கவின், லாஸ்லியா, தர்ஷன், ஷெரின் ,சாண்டி ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றார்கள். இதில் கவின் பிக் பாஸ் அறிவித்த 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே விலகி வந்து விட்டார்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் யாரை முதலில் சந்தித்துள்ளார் பாருங்க.! வைரலாகும் புகைப்படம்.!

- Advertisement -

எனவே கடந்தவாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், அவருக்கு பதிலாக தர்ஷன் வெளியேறியதை சக போட்டியாளர்களும் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள முடியாமல் திகைத்துப் போனார்கள். இந்தநிலையில் தர்ஷன் வெளியேற்றத்தின் காரணம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதில் அவர்கள் முக்கிய காரணமாக சொல்வது தர்ஷன் எப்படியும் காப்பாற்றப்பட்டு விடுவார் என்ற நம்பிக்கையில் ஷெரீனுக்கு வாக்களித்ததாக கூறி வருகிறார்கள். கடந்தவாரம் ஷெரின் நாமினேசனில் இருந்து வந்ததால் அவருக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வரும் என்று எதிர்பார்த்த பல்வேறு ரசிகர்கள் ஷேரினை காப்பாற்ற வாக்களித்துள்ளார்கள்

-விளம்பரம்-

ஆனால், அதுவே தர்ஷனுக்கு குறைவான வாக்குகள் பதிவாக வழிவகுத்துள்ளது இதனால் ரசிகர்கள் பலரும் தற்போது ஷெரீனுக்கு வாக்களித்ததை எண்ணி புலம்பி வருகிறார்கள். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் நீங்கள்தான் டைட்டில் வின்னர் என்று தர்ஷனுக்கு பல்வேறு ரசிகர்களும் தங்களது ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த தர்ஷனுக்கு விரைவில் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement