லாஸ்லியா செய்துள்ள மரியாதை குறைவான செயல்.! வருத்தப்பட்ட மோகன் வைத்யா.!

0
11637
mohan
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் நான்காவது போட்டியாளராக மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். மோகன் வைத்யா தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து வந்தார் எனவும், அதே போல இவர் அடிக்கடி பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது பெண்களை போல புறம் பேசுவது என்று இருந்துவந்த்தால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டார். இவரை கலாய்த்து பல மீம்கள் கூட சமூக வலைதளத்தில் வந்த வண்ணம் இருந்தது.

-விளம்பரம்-

இதனால் தான் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. கடந்த ஞாயிற்று கிழமை இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக கூட பெண் போட்டியாளர்களை கட்டி அணைத்து முத்தும் கொடுத்துவிட்டு தான் வந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மோகன், தான் தவறான எண்ணத்தில் யாரையும் கட்டிப்பிடிக்கவில்லை.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட வித்யூ லேகா.! ரசிகர்கள் ஷாக்.! 

- Advertisement -

அங்கு இருந்த அணைத்து பெண்களையும் என் மகளாகதான் பார்த்தேன் என்றார். மேலும், அப்போது லாஸ்லியா குறித்து கேட்ப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மோகன், அவரை பற்றி நான் என்ன சொல்வது, ஒரு முறை பிக் பாஸ் வீட்டில் வெள்ளைநிற சோபா ஒன்றை ஒண்டுவந்தனர்.

அப்போது லாஸ்லியா ஷூ காலுடன் அந்த சோபாவில் படுத்திக்கொண்டிருந்தார். இதனால் நான் அவரிடம் அது வெள்ளை சோபாமா இப்படி ஷூ காலுடன் அழுக்காகி விடாதே என்றதற்கு அவர் நான் அமர்ந்து கொண்டிருந்த பக்கம் காலை நீட்டினார்.

-விளம்பரம்-

ஒடனே நான், என் வயசுக்கு கொஞ்சம் மரியாதையை கொடுமா காலை கீழே வை என்று பொறுமையாக சொன்னதும் அவர் என்னிடம் முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார் பின்னர், சிறிது நேரம் கழித்து என் மீது என்ன கோபமா என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லையே என்று எப்போதும் போல சிரித்துவிட்டு சென்று விட்டார் என்றார்.

ஏற்கனவே, நேற்றய நிகழ்ச்சியில் லாஸ்லியா வடிவேலுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதை மட்டம் தட்டுவதாக கூறியுள்ளது சமூக வலைதளத்தில் லாஸ்லியா மீது பல்வேறு விமர்சனங்களை பெற்றுத்தந்துள்ளது. இந்த நிலையில் மோகன் வைத்யாவிடம் வயது வித்யாசம் பார்க்காமல் லாஸ்லியா இப்படி நடந்துவந்துள்ளது, அவர் மீது மேலும் சில தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Advertisement