விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேறி இருந்தார். அதேபோல கடந்த வாரம்தான் தொகுப்பாளர் அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். கடந்த 2 வாரமாக கொஞ்சம் சலிப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து வருகிறது அதற்கு காரணமே பிக் பாஸ் கொடுத்து வரும் டாஸ்க் தான்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சுரேஷ் அரக்கர் அணியிலும் ரியோ அரசர் அணியிலும் இருப்பது தான் ஹைலைட்டே. நேற்றைய நிகழ்ச்சில் பாலாஜி, சோம் சேகர் ஆகியோர் அரக்கர்களிடம் தோற்று விட்டார்கள். சனம் ஷெட்டி, சம்யுக்தா, ரியோ ஆகியோர் வெற்றி பெற்றனர். இன்னும் ரம்யா, நிஷா, வேல்முருகன் மட்டும் இந்த டாஸ்கில் ஆடாமல் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது.
கடந்த திங்கள் கிழமை இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரியோவும் கடந்த வாரம் டாஸ்க்கில் வெற்றி பெற்ற சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் ஆகிய இருவர்களையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடந்த நாமினேஷன் அடிப்படியில் சுரேஷ், ஆரி, ஆஜீத் அனிதா, பாலாஜி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் ஆஜீத்திடன் Eviction Free Pass இருக்கிறது என்பது குறிப்பிடத்க்கது.
அதில் அரக்கர்கள் ராஜாவாகவும், ராஜாக்கள் அரக்கர்களாகவும் மாறியுள்ளார்கள். இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகிஇருந்தது. அதில் சனம் ஷெட்டியை சுரேஷ் தண்டாயுதத்தால் தாக்க, இதனால் கடுப்பான சனம் ஷெட்டி சுரேஷ் சக்ரவத்தியை வாடா போடா என்று திட்டி தீர்த்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் சுரேஷை கனபெஷன் ரூமிற்கு அழைத்து பிக் பாஸ் விசாரிக்கும் போது சுரேஷ் கண்ணீர் விட்டு அழுகிறார்.