இதுவரை யாரும் அறிந்திராத தன் உண்மை முகத்தை வெளிக்காட்டிய ஜூலி – பாராட்டு தெரிவித்து சனம் போட்ட பதிவு.

0
472
sanam
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் பேராதரவை பெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் கடந்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர் தற்போது பிரபலமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இவர் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த கலவரத்தால் ஜூலி மாத்தி மாத்தி பொய் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நபராகவும், மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தவர் ஆகவும் ஜூலி இருந்தார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சி என்ற பெயரை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போயிருந்தார். ஆனால், ஜூலி தான் எடுத்த பெயர் மொத்தத்தையும் டேமேஜ் ஆகி விட்டு தான் வெளியே வந்தார் என்றே சொல்லலாம். இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

- Advertisement -

குறையாத ஹேட்டர்ஸ்கள் :

பலரும் அவரை பயங்கரமாக திட்டி தீர்த்து மீம்ஸ் போட்டு கலாய்த்து இருந்தார்கள். அதோடு நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் அவரைப்பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் அதிகம் இருந்தது. இருந்தாலும் ஜூலி மனம் தளராமல் தைரியமாக பல மேடைகளில் கலந்துகொண்டு பேசியிருந்தார். அப்போதெல்லாம், நான் என்ன கொலை? கொல்லையா? பண்ணிவிட்டேன். பொய் தானே சொன்னேன். இதை ஏன் பெரிய விஷயமாக எடுத்து பிரச்சனை பண்ணுகிறீர்கள்? என்று பேசி இருந்தார்.

Image

ஜூலியின் மறு பக்கம் :

இருந்தும் அவரை விடாமல் நெட்டிசன்கள் திட்டி தீர்த்தார்கள். இப்படி ஒரு நிலையில் தற்போது ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இதில் இவர் திறமையாகவே யோசித்து கவனமாக விளையாடி வருகிறார். அந்த வகையில் நடந்த செலபிரெட்டி vs பிரஸ் மீட் டாஸ்கில் ஜூலி செலவு செலபிரெட்டியாக இருந்தார். அதில் ஜூலி இடம் முதல் சீசனில் நடந்த விஷயத்தைக் குறித்து கேட்டு வந்தார்கள். அதற்கு ஜூலி கூறியது, பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல விமர்சனங்கள், பலரும் திட்டி தீர்த்த சமயம்.

-விளம்பரம்-

குழந்தையை காப்பாற்ற 23 லட்சத்தை புரட்டிய ஜூலி :

அப்போது ஒரு சேவை மையத்தில் இருந்து ஒருவர் வந்து ஒரு குழந்தைக்கு ஆபரேஷன் செய்யணும் என்று உதவி கேட்டு இருந்தார்கள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அப்ப சோசியல் மீடியா முழுவதுமே என்னை பற்றி தான் தீட்டி கொண்டு இருந்தார்கள். இருந்தாலும் ஒரு ஒரு ரூபாய் வாங்கினாலும் குழந்தையின் உயிரை காப்பாற்றி விடலாம் என்று நினைத்துபோராடினேன். அதோடு என்னை திட்டியதற்கும கவலை இல்லை. தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று போராடி ஒரு வாரத்திற்குள் அந்த குழந்தைக்காக 23 லட்ச ரூபாய் ரெடி பண்ணி மருத்துவ செலவிற்கு கொடுத்தேன்.

பாராட்டிய சனம் :

தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளார். அந்த குழந்தையின் பெயர் குகன்.இப்ப என்னை எங்க பார்த்தாலும் அம்மா என்று தான் கூப்பிடுவார் என்று கண்ணீர் மல்க உணர்ச்சி வசமாக ஜூலி பேசி இருந்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பலரும் பாராட்டி வரும் நிலையில் சீசன் 4 போட்டியாளரான சனம் ‘தன்னுடைய கடந்த காலத்தில் சந்தித்த அனைத்து எதிர்மறையான விஷயங்களை எண்ணி பழிபோட்டு விளையாடாமல் அதிலும் கருணையும் முதிர்ச்சியையும் காட்டி சிறப்பாக கையாண்டு இருக்கார் ஜூலி என்று பாராட்டி இருக்கிறார்.

Advertisement