சேரன் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள்.! அவரது விருதுகளை பார்த்து வாயடைத்து போன வீடியோ.!

0
50016
Cheran
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகில் இயக்குனராக பணியாற்றி வருபவர் சேரன். இவர் தமிழ் திரைப்படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது விஜய் டிவி தொலைக்காட்சிகளில் பல மாதங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக சேரன் அவர்கள் பங்கு பெற்றார் .மேலும் சில வாரங்களுக்கு முன்னால் அதாவது பிக்பாஸ் வீட்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் சேரன் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

சேரன் அவர்கள் தென்னிந்தியா தமிழ் திரைப்படத் துறையில் பல சாதனைகளை புரிந்து உள்ளார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய மூன்று திரைப்படங்கள் தேசிய விருதையும் பெற்றுள்ளது .அது வெற்றிகொடிகட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் தான் . மேலும், இவர் சினிமா துறையில் பல படங்களை இயக்கியும் அதிலே நடித்தும் கூட உள்ளார்.சேரன் அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக வேலை புரிந்தவர். தாயார் பள்ளி ஆசிரியை ஆவார். இவருக்கு சிறு வயதிலேயே நாடகங்கள் நடிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்.

இதையும் பாருங்க : பிக் பாஸின் முதல் சீசன் தான் பெஸ்ட்.! காரணத்துடன் சொன்ன முதல் சீசனின் பிரபல போட்டியாளர்.!

- Advertisement -

மேலும்,2011ம் ஆண்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திரைப்படங்களில் வாழ்க்கையை தொடர சென்னைக்கு வந்தார் ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார்.பின் இயக்குனராகவும் பணியாற்றினார்.இவர் நாட்டுப்புற மக்களின் அடிப்படை வாழ்க்கையை எடுத்துக் கூறுவதிலும் வல்லவர். இது மட்டுமல்லாது சேரன் தமிழ் சினிமாவில் பல்வேறு விருதுகளையும் அள்ளி எடுத்துள்ளார். இந்த நிலையில் சேரன் வாங்கிய விருதுகளை பார்த்து பிக் பாஸ் போட்டியாளரான சாக்க்ஷி வாயடைத்து போயுள்ளார்

https://www.instagram.com/p/B3ZVht7h3UA/

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் பிக்பாஸில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர் அதில் சாக்ஷி தான் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் சந்தித்து விட்டார் அதேபோல ஷெரின் வெளியே வந்தவுடன் சாக்ஷியுடன் இணைந்து மற்ற போட்டியாளர்களை அவர்களது வீட்டிற்கே சென்று சந்தித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சேரன் வீட்டிற்கு சென்றுள்ளார் ஷெரின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு பிறகு சேரன் ஷெரின் மீதுதான் மிகவும் அக்கறையாக இருந்து வந்தார். அடிக்கடி ஷேரினை பிக்பாஸ் வீட்டின் தேவதை என்றும் கூறிவந்தார் சேரன். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேறியபோது லாஸ்லியா அழுததை விட ஷெரின் தான் மிகவும் வருத்தப்பட்டார்.

-விளம்பரம்-

இந்தநிலையில் சேரனை சந்திக்க சாக்ஷி மற்றும் ஷெரின் வீட்டிற்கு சென்றுள்ளனர் அவர்களுக்கு விருதுகளையும் அளித்துள்ளார் சேரன் மேலும் சேரனின் மகள் மற்றும் மனைவியுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழித்தனர் செரின் மற்றும் சாக்ஷி, சேரன் வாங்கிய விருதுகளை வீடியோ எடுத்துள்ளனர் .சாக்ஸி எடுத்துள்ள அந்த வீடியோவில் சேரன் ஒரு அலமாரி முழுக்க விருதுகளாக வைத்துள்ளதை கண்டு சாக்ஸி வாயடைத்துப் போய் உள்ளார் மேலும் அந்த வீடியோவில் நான்தான் அதிக விருதுகளை வாங்கி இருக்கிறேன் என்று நினைத்தால் இவர் எத்தனை விருதுகளை வாங்கியுள்ளார் என்று பாருங்கள் என்று மிகவும் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார் சாக்ஷி. சேரன் வாங்கிய விருதுகளை கண்டால் நமக்கே கொஞ்சம் சேரன் மீது மேலும் மதிப்பைக் கூட்டுகிறது

Advertisement