அவ இதனால தான் அடிக்கடி தூங்குறா – மகளுக்காக மீண்டும் வனிதா கொடுத்த முட்டை பாருங்க. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.

0
439
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகளும் ஒருவர். வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார்.

- Advertisement -

இதனால் சமூக வலைதளத்தில் ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகிறார். என்னதான் ஜோவிகா ட்ரோல்களுக்கு உள்ளானாலும் விமர்சனம் என்ற பெயரில் தனது மகளுக்காக தொடர்ந்து முட்டு கொடுத்து வருகிறார் வனிதா. அந்த வகையில் சமீபத்தில் ஜோவிகாவின் தூங்கும் பழக்கம் குறித்து பேசிய வனிதா ‘நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். அவள் மன உளைச்சலில் இருப்பதால் தான் இப்படி தூங்கி வருகிறார்.

இரண்டு வாரங்களாகவே அவளுக்கு கெட்ட கனவு வந்ததில் இருந்தே ரொம்ப பாதிச்சு இருக்கா. அந்த வீட்டில் இருக்கும்போது மன அழுத்தமோ, மன உளைச்சலோ ஏற்பட்டால் தூக்கம் தான் வரும். எனக்கு தெரியும், எனக்கும் இந்த மாதிரி ஆகிருக்கு. நம்மளையே அறியாம நாம் தூங்கிருவோம்’ என்று முட்டு கொடுத்துள்ளார். ஏற்கனவே ஜோவிகா அடிக்கடி விழுவது குறித்து முட்டு கொடுத்தார் வனிதா.

-விளம்பரம்-

அதற்க்கு காரணம் சொன்ன வனிதா ‘ஜோவிகாவுக்கு அறிவே இல்லை என்றும், வீட்டில் இருந்து காருக்கு செல்வதாக இருந்தாலும் சரி, ஆலம்பாக்கத்தில் உள்ள என்னுடைய அப்பா வீட்டில் இருக்கும் போதும் சரி, எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பா. அவளுக்கு ஓடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவள் ஒரு ரன்னர், இதனால் பலமுறை ஓடாதே கீழே விழுந்து விடுவாய் என சொல்லி பார்த்துவிட்டேன் அதை மட்டும் அவ செய்யவே மாட்டா.

விழுந்து நல்ல அடிபடட்டும் அப்போதான் அவளுக்கு புத்தி வரும்’ என்று முட்டு கொடுத்தார். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசிய வனிதா ‘எனது மகள் குறித்து பேசி இருக்கும் வனிதா ‘அவளுக்கு வெளியில் வந்து நிறைய வேலைகள் இருக்கிறது அவளுக்கு தற்போது 18 வயது தான் ஆகிறது. இன்னும் சினிமா துறையில் அவளுக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இருக்கிறது. ஒரு திரிஷா நயன்தாரா போல திகழக்கூடிய ஒரு எதிர்காலம் இருக்கிறது ‘ என்று பேசி இருந்தார்.

Advertisement