ஸ்கூல் யூனிபார்ம்ல அது எப்படி தெரியும் ? அந்த பொண்ணு sympathyக்கு இப்படி சொல்லுது – நிவாஷினி குறித்து வனிதா.

0
766
- Advertisement -

கொஞ்சம் ஓவராகவே நிவாசினி கதை கட்டியிருக்கிறார் என்று வனிதா வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில் முதல் வாரத்திலேயே முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார். நிகழ்ச்சியின் இரண்டாம் வாரம் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்து இருக்கிறது. அதில் ஜி பி முத்து இந்த வார தலைவர் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். இதற்கு கதை சொல்லும் நேரம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த போட்டியாளர் இறுதிவரை கதையை சொல்லி முடிக்கிறாரோ அவர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டு வந்தார்கள். அந்த வகையில் நிவாசினியும் கதை சொல்லி இருக்கிறார்.

நிவாசினி சொன்ன கதை:

அதில் அவர், எங்கள் வீட்டில் என்னை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். நான் தான் கடைசி பிள்ளை. பள்ளிக்கூடம் போகும்போது தான் என்னுடைய சோதனை காலம் தொடங்கியது. எனக்கு கழுத்தில் இருந்து உடம்பு பாதி வரை தழும்புகள் இருக்கும். அதை பார்த்து பலரும் என்னை கிண்டல் கேலி செய்வார்கள். இதனால் நான் மன உளைச்சல் அடைந்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் சில சமயம் அந்த தழும்புகளை எல்லாம் கத்தியில் கீறி இருக்கிறேன். என்னையே நானே வெறுத்தேன். அப்போது என்னுடைய அம்மா ஆயில் கம்பெனியில் வேலை செய்து இருந்தார்.

-விளம்பரம்-

வனிதா வெளியிட்ட வீடியோ:

பொருளாதார ரீதியாக குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் இருந்தது என்று சொல்லி இருந்தார். இப்படி இவர் கதை சொல்லியதற்கு யாருமே பஸர் அடிக்கவில்லை. இதனால் நிவாஸினி நாமினேஷனில் இருந்து தப்பித்து இருந்தார். இந்நிலையில் நிவாஸினி பேசியதற்கு வனிதா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நிவாஷினி பேசினது கொஞ்சம் ஓவரா கட்டுக்கதை மாதிரி தான் இருக்கிறது. ஒருத்தரை பற்றி பேசக்கூடாது இருந்தாலும் உண்மையை சொல்ல வேண்டும். எனக்கு சிங்கப்பூரில் உறவினர்கள் இருக்கிறார்கள். அங்க எல்லாம் பாடி ஷேமிங், ஒருவரை உருவ கேலி செய்வதெல்லாம் மிகப்பெரிய குற்றம். தண்டனை கொடுப்பார்கள்.

நிவாசினி குறித்து வனிதா சொன்னது:

இப்படி இருக்கும்போது இந்த பெண்ணை எப்படி செய்திருப்பார்கள்? அது மட்டும் இல்லாமல் பள்ளிப் பருவத்தில் பள்ளி ஆடை அணிந்து செல்லும்போது எப்படி இவருடைய தழும்பு தெரியும்? அப்படியே தெரிந்தாலும் சின்ன தழும்பு மாறி தான் தெரியும். அதை ஒரு சில பேர் பார்த்து சொல்லியிருப்பார்கள். பெரிய அளவில் கிண்டல் கேலி செய்யும் அளவிற்கு ஒன்றும் இருந்திருக்காது. அது மட்டும் இல்லாமல் அவங்க அம்மா ஆயில் கம்பெனியில் வேலை செய்திருக்கிறார் என்று சொன்னார். எனக்கு அந்த கம்பெனியை நன்றாக தெரியும். அதில் நன்றாக வருமானம் வரும். இவர் சிம்பதிக்காக கொஞ்சம் அதிகமாகவே கதை கட்டியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement