தீபாவளி அன்று, தான் நடிக்கும் சீரியலின் ப்ரோமோவை வெளியிட்ட வனிதா. என்ன தொடர்னு பாருங்க.

0
10659
vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் என்றாலே, அவர்ககுக்கு கண்டிப்பாக சினிமாவில் ஒரு சிறந்த எதிர்காலம் அமைந்துவிடுகிறது. அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர்.மேலும், சினிமாவில் ஓரம் கட்டப்பட்ட பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி அவர்களுக்கு மீண்டும் சினிமா துறையில் ஒரு கம் பேக்கை கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது வனிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்க இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த சீசன் மிகவும் சர்ச்சையாகவும் சுவாரசியமாகவும் சென்றதற்கு முக்கிய காரணமாக இருந்து வந்தார் வனிதா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளிலேயே பல்வேறு சண்டைகள் வெடித்தன இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி உயர்வதற்கு வழி தான் ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் இவர், செய்த சில நாரதர் வேலைகளால் நிகழ்ச்சியின் ஒரு சில வாரங்களிலேயே ரசிகர்களால் வெளியேற்றப்பட்டு இருந்தார்.

- Advertisement -

ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்றதும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இல்லை என்ற உணர்ந்த ரசிகர்கள் மீண்டும் வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஏற்றார்போல வனிதாவை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற போதெல்லாம் சர்ச்சைகளும் சண்டைகளும் நிறைந்தே காணப்பட்டது. அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி எறியதற்க்கு வனிதா ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார்.

This image has an empty alt attribute; its file name is vanitha-chandralekha-1024x584.jpg

இந்த நிலையில் வனிதா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடிக்கப்போவதாக சில நம்பகமான தகவல்கள் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வந்தன. ஆனால், அதன் பின்னர் வனிதா சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ‘சந்திரலேகா’ சீரியலில் நடிக்க போவதாக நம்பகரமான தகவல் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக, வனிதா ‘சந்திரலேகா’ நடிகர்களுடன் வனிதா இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருந்தன.

-விளம்பரம்-

விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான வனிதா, தற்போது சின்னத்திரையிலும் சந்திரலேகா சீரியல் மூலம் அறிமுகமாக இருக்கிறார் என்பது தான் சிறப்பு. மேலும், சந்திரலேகா தொடரில் வனிதாவாகவே சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம் வனிதா. சமீபத்தில் இந்த தொடரின் இரண்டு ப்ரோமோ விடியோக்கள் வெளியாகி இருந்தன. அதனை வனிதா, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement