கமல் அவர்களே இது உங்கள் முப்பாட்டன் காலம் அல்ல திருமா காலம் – கமலை விமரித்து விக்ரமன் போட்ட பதிவு.

0
895
vikraman
- Advertisement -

கமல் குறித்து விமர்சித்து விக்ரமன் பதிவிட்டு இருக்கும் பழைய பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
vikraman

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக சாந்தி வெளியேற்றப்பட்டார். அதே போல ஜிபி முத்து தாமாக முன் வந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான விக்ரமனுக்கு வாக்கு கேட்டு ரசிகர்கள் சிலர் போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே நடிகர், நடிகைகள், மாடல் என்று தான் கலந்துகொள்வார்கள்.

ஆனால், பிக் பாஸ் வரலாற்றில் முத்ல் முறையாக ஒரு அரசியல் பிரபலம் கலந்துகொண்டது இதுவே முதன்முறை. இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். விக்ரமன் பல அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து இருக்கிறார். அதில் பல பேட்டிகளில் பலரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனால் இவர் பிக் பாஸில் போட்டியாளர்களை தெறிக்கவிடுவார் என்று பலர் நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு நமுத்து போன பட்டாசாக தான் இருந்து வருகின்றனர். அதிலும் இவரை அசீம் தான் அடிக்கடி அசிங்கப்படுத்திகொண்டே இருக்கிறார். ஆனாலும், இவர் பொறுமையாக இருந்ததற்கு பலனாக இவருக்கு கமலிடம் இருந்தே பாராட்டுக்கள் கிடைத்தது.

இந்த நிலையில் கமல் குறித்து விமர்சித்து விக்ரமன் போட்டு இருக்கும் பழைய பதிவுகள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக Psbb பள்ளி விவகாரத்தில் கமலை விமர்சித்து இருக்கிறார். மேலும், இன்னொரு பதிவில் ஒரு மூட்டையை போல தூக்கி வருகிறார்கள் என்றால் செல்வி ஜெயலலிதா. சக்கர நாற்காலி என நக்கல் அடிக்கிறார் கமலஹாசன். ஒரு எளியவன் நாடாள வந்து விட்டானே எனும் அவர்களின் முப்பாட்டன் காலத்து வன்மம். கமல் அவர்களே இது உங்கள் முப்பாட்டன் காலம் அல்ல திருமா காலம் நீங்கள் நிச்சயம் வருந்துவீர்கள்

Advertisement