-விளம்பரம்-
Home பிக் பாஸ்

விக்ரமன் திருமண வாழ்க்கை குறித்து கேட்டதும் கண்ணீர் விட்டு அழுத அவரின் தந்தை.

0
605
vikraman

பிக் பாஸ் விக்ரமன் திருமணம் குறித்து அவர்களுடைய பெற்றோர்கள் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது . விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 47 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6:

மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

விக்ரமன் குறித்த தகவல்:

-விளம்பரம்-

இந்த சீரியலை சுந்தர் கே விஜயன் இயக்கியிருந்தார். நடிகர் சரத்குமாரின் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்திருந்தது. இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியலில் விக்ரமனுடன் மதுமிலா நடித்திருந்தார். அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் விக்ரமனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இவர் எந்த பிரச்சனை என்றாலும் குரல் கொடுத்து வருகிறார். இதனால் நாளுக்கு நாள் இவருக்கு ஆதரவு அதிகமாகி வருகிறது. அதோடு இந்த நிகழ்ச்சியின் வின்னராக விக்ரமனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். மேலும், பலரும் இவர் நடிகர் ஆரிப்போல ட்ரை செய்கிறார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, விக்ரமனுக்கு திருமணம் ஆனதா? இல்லையா? என்று பல பேர் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி கொண்டு வருகிறார்கள்.

விக்ரமன் திருமணம்:

இந்த நிலையில் இது குறித்து பிரபல சேனல் விக்ரமனின் பெற்றோரிடம் கேள்வி கேட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் கூறியிருப்பது, விக்ரமனுக்கு திருமணம் ஆகவில்லை. அதுதான் உண்மை. ஏனென்றால், அவர் திருமணம் குறித்து பேசினால் நான் பார்த்துக்கொள்கிறேன். இப்போதைக்கு வேணாம் என்று கூறுகிறார். அவர் ஒரு திட்டம் வைத்திருப்பார். நல்ல நிலைமைக்கு வந்து சாதித்த பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? என்று தெரியவில்லை என்று கண் கலங்கியவாறு விக்ரமனின் பெற்றோர்கள் கூறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news