‘நிரூப் கூட எப்போ கல்யாணம்’ – ரசிகர் கேட்ட கேள்வி, தன் திருமண திட்டம் பற்றி யாஷிகா சொன்ன பதில்.

0
448
yashika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யாஷிகா அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். மேலும், யாஷிகா எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் தான் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும், கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டும் வந்தார்.

- Advertisement -

விபத்தில் இருந்து மீண்டு வரும் யாஷிகா :

பின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அந்த விபத்தில் யாஷிகாவின் தோழி அநியாயமாக பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முன்னாள் காதலர் நிரூப் :

சமீபத்தில் தான் யாஷிகா ஆனந்த் வீடு திரும்பி இருந்தார். மேலும், குணம் அடைந்த யாஷிகா ஆனந்த் முதன் முதலாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அதிலும் அந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நிரூப் இவரின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. நிரூப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது யாஷிகா தான் தன்னுடைய முன்னாள் காதலி என்றும் அவளால் தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூட கூறி இருந்தார்.

-விளம்பரம்-

நிரூப்புடன் திருமணமா :

இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த யாஷிகாவிடம் ரசிகர் ஒருவர் ‘நிரூப்கும் உங்களுக்கும் எப்போ கல்யாணம்’ என்று கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா ‘நாங்கள் இப்போது நல்ல நண்பர்களாக இருக்கிறோம், எப்போதும் இருப்போம். நாங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றுகொண்டு இருக்கிறோம். இப்போதைக்கு திருமணத்தை பற்றிய எந்த ஒரு திட்டமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

காதல் முறிவு குறித்து நிரூப் :

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய நிரூப், நாங்கள் பிரிந்ததற்கு காரணம் என்று பார்த்தால் செட்டாகவில்லை சரி என்று பிரிந்து விட்டோம். வேறு ஒன்றும் காரணமில்லை. ரெண்டு பேரும் பேசி தான் பிரிந்தோம். பிரிந்தும் நாங்கள் ரெண்டு பெரும் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம். அதற்காக லவ் பண்ணி பிரிந்து விட்டோம் என்று வெறுப்போ, முகத்தை திருப்பிக் கொண்டு செல்வது என்று அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. நாங்க நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பிக்பாஸ்க்கு பிறகும் வெளியே வந்து கூட அவளிடம் நான் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement