நடுவரின் இந்த தீர்ப்பால் பஞ்சாப் தோற்றது – புகைப்பட ஆதாரத்துடன் ஷேவாக் போட்ட பதிவு.

0
1055
sewah
- Advertisement -

நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் தோல்விக்கு நடுவரின் தவறான முடிவு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஷேவாக் சூசகமாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஐபிஎல் தொடரின் 13 வது சீசன் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி தனது வெற்றிக்கணக்கை துவங்கியது சென்னை அணி. இதை தொடர்ந்து. ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 157 ரன்களை எடுத்தது.பிறகு 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடியது.

- Advertisement -

ஆனால், 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப் அணி. பின்னர் அடுத்தடுத்து விக்கட்டுகள் விழ ஒரு கட்டத்தில் வெற்றிக்கு 3 பந்துகளுக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் மயங்க் அகர்வால் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் 1 பந்திற்கு ஒரு ரன் தேவை என்று இருந்த போது இறுதியில் அதை எடுக்க முடியாமல் போட்டி டிராவானது. தன்பிறகு சூப்பர் ஓவரில் விளையாடிய பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 2 பந்துகளில் 3 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அம்பயர் செய்த தவறினால் பஞ்சாப் அணி தோற்றது என்று சேவாக் தனது கருத்தினை சூசகமாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சேவாக் கூறியது உண்மைதான் ஏனெனில் பஞ்சாப் அணி வெற்றி நெருக்கத்தில் இருந்த பொழுது அகர்வாலுடன் ஒரு பந்தை அடித்துவிட்டு இரண்டாவது ரன்னை கம்ப்ளீட் செய்தார். ஆனாலும் அகர்வால் கிரீசை தொடவில்லை என்று ஷார்ட் ரன் என அறிவித்து ஒரு ரன்னை மட்டுமே அம்பயர் வழங்கினார். அந்த ரன்னை மட்டும் பஞ்சாப் அணி பெற்றிருந்தால் சூப்பர் ஓவர் வரை செல்லாமல் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும் இதுவே சேவாக் கூறிய கருத்து அதையே ரசிகர்களும் கூறி இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றனர். மேலும், ஆட்ட நாயகன் விருதை நடுவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் கேலி செய்துள்ளார் சேவாக். ஆனால், நடுவரின் தீர்ப்பு சரி தான் என்று ரசிகர்கள் சிலர் சில ஆதாரத்தை பதிவிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement