வனிதாவை தட்டி கேட்க தர்சனை தவிர வேறு யாருக்கும் தைரியம் இல்லையா.!

0
3879
Vanitha
- Advertisement -

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி முழுதும் வனிதாவின் குரல் மட்டும் தான் கேட்டுக்கொண்டே இருந்தது. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அபிராமி இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் வீட்டில் இருக்கும் சில பிரச்சினைகளை தீர்த்து விடலாம் என்று எண்ணிய அபிராமி மதுமிதா விடும் கார்டன் ஏரியாவில் பேசிக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அபிராமி மற்றும் மதுமிதா பேசிக்கொண்டிருக்கும் போது பெண்கள் அணியும் ஆடை சம்பந்தமான சில பேச்சுக்களும் அடிபட்டது. இதன் பின்னர் மதுமிதா தன்னிடம் பேசியதை கொஞ்சம் ட்விஸ்ட் செய்து வணிதாவிடம் கூறி விட்டார் அபிராமி. இதனால் ஆத்திரமடைந்த வனிதா வழக்கம்போல கத்த தொடங்கி விட்டர் . பின்னர் அபிராமியும் கொஞ்சம் கத்தாமஇருங்கள் மீன் மார்க்கட் போல போல இருக்கிறது என்று கூற, மேலும் ஆத்திரமடைந்த வனிதா அபிராமியை சகட்டுமேனிக்கு கத்த தொடங்கி விட்டார்.

- Advertisement -

யாரையும் பேச விடாமல் வனிதா கத்திக் கொண்டிருக்க பின்னர் சாண்டியிடம் நான் ஏதாவது தவறாக பேசினேனாசாண்டி, அவள் என் மீன் மார்க்கெட் என்ற வார்த்தை எல்லாம் பயன்படுத்துகிறாள் என்று கூறினார். பின்னர் சாண்டியும் நீங்கள் முதலில் மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முழுதாக கேளுங்கள் என்றார். அதன்பின்னர்தர்ஷனும், ஆமாம் அதைத்தான் நானும் சொல்கிறேன் முதலில் மற்றவர்கள் பேசுவதை நீங்கள் கேளுங்கள் என்றதும், தர்ஷன் உனக்கு வயதிலும் அனுபவத்திலும் பெரியவள் நான் அவளின் என்னை மீன் மார்க்கெட் என்று குறிப்பிட்டால் என்று கேட்க, தர்ஷனோ நீங்கள் அன்று மீராவை தூக்கில் தொங்கி விடுங்கள் என்று சொல்லவில்லையா என்றார்.

தர்ஷன் இடமிருந்து இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத வனிதா. ஆமாம் நான் கோபத்தில் சொன்னேன் என்றார். அதற்கு தர்ஷனும் அதேபோலத்தான் அவளும் கோபத்தில் ஏதோ பேசிவிட்டார். கோபத்தில் பேசுவது அனைவருக்கும் சகஜம்தான. நீங்கள் மீரா மிதுனை தூக்கி விடுங்கள் என்று சொன்னது மட்டும் கோபத்தில் வந்த வார்த்தை என்றால் அவளும் அப்படி தானே என்று விட்டு விட வேண்டியது தானே என்றார் தர்ஷன். பின்னர் தர்ஷன் கேள்விக்கு சரியான பதிலை கூற முடியாது வனிதா. இதுல நீ தலையிடாதே நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டா.ர் பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் பேச்சை யாரும் எதிர்த்து கேட்காத நிலையில் தர்ஷன் மட்டும் எதிர்த்து கேட்டது ரசிகர்களின் கவனத்தை கொஞ்சம் ஈர்த்தது.

-விளம்பரம்-

அதேபோல தர்ஷன் தான் பிக் பாஸ் வெற்றி யாருக்கு என்ன பிரச்சனை வந்தாலும் இரு தரப்பு நியாயத்தையும் வைத்து பேசக்கூடிய நபராக இருந்து வருகிறார். மேலு,ம் யார் என்ன தவறு செய்தாலும் அதனை பின்னால் சென்று கூறாமல் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை அவர்கள் முகத்துக்கு நேரே கூறிவிடுகிறார் தர்ஷன். இதனால்தான் தர்ஷன் இறுதிப்போட்டிக்கு வரவேண்டும் என்று பாத்திமா கூட கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement