“வட இந்தியர்களுக்கு எதன் அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது” விளக்கம் அளித்த என்.எல்.சி நிறுவனம்.

0
1225
- Advertisement -

நிலம் வழங்கப்படாத வடஇந்தியர்கள் 28 பெருக்கு எதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்துபல்வேறு விமர்சனகள் எழுந்தன. இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளது என்.எல்.சி நிறுவனம் தனது விளக்கத்தையும் அளித்துள்ளது. என்.எல்.சி நிறுவனம் இந்திய அளவிலான பெரிய நிறுவனம், நாங்கள் என்.எல்.சி க்கு நிலம் அளித்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

-விளம்பரம்-

அன்புமணி ராமதாஸின் கேள்வி

இரண்டு நாட்களுக்கு முன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி நிறுவனம் குறித்து கேள்விகளை கேட்டு ட்வீட் செய்திருந்தார். இதில் என்.எல்.சிக்கு நிலம் வழங்கிய கடலூரை சேர்ந்த 23 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்னும் வேலை வாய்ப்பு வழங்கப் படாத நிலையில் நிலம் வழங்காத வட இந்தியர்களுக்கு எப்படி வேலை வழங்கப்பட்டது எப்படி? 

- Advertisement -

அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும் முறைகேடுகளும் நடந்துள்ளதா என்பதை குறித்து விசாரிக்க விரிவான விசாரணை வேண்டும் என்றும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

விளக்கம் அளித்த என்.எல்.சி

என்.எல்.சி க்கு வீடு மற்றும் நிலம் வழங்கதவர்களுக்கு 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் இது என்.எல்.சி நன் மதிப்பை குறைக்கும் வகையில் செய்திகள் வெளியாகி உள்ளது என்றும் என்.எல்.சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது நடைபெற்று இருக்கும் மோசமான மற்றும் பதட்டமான சூழலை மேலும் மோசமாக்குவதற்கு இப்படி தகவல்கள் வெளியாகி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

-விளம்பரம்-

28 பேரின் வேலை குறித்து கூறிய என்.எல்.சி

அந்த 28 பேருக்கும் தவறான முறையில் வேலை வழங்கப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் என்.எல்.சி நிறுவனம் விளக்கமளித்து. நிலம் வழங்கப்படாத எந்த வட இந்தியர்களுக்கும் வேலை வழங்கப் படவில்லை என்றும் விளக்கமளித்து. அந்த 28 பேரும் என்.எல்.சி க்கு நிலம் அளித்தவர்கள் என்றும் அவர்கள் ராஜஸ்தானில் உள்ள என்.எல்.சிக்கு நிலம் அளித்ததின் அடிப்படையில் தான் அவர்களுக்கு வேலை வழங்கபட்டுள்ளது என்றும் என்.எல்.சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

என்.எல்.சி பார்சிங்சார் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் திட்டங்களுக்கு (Barsingsar Thermal Power Station) அவர்கள் வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாகவும் என்.எல்.சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.               

Advertisement