மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் வெளிப்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, எதையும் அவசரமாகச் செய்யாமல் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கிவிட்டு பணிகளைத் தொடங்கவும்.