இன்று துலாம் ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக அமையும். உடல் நலத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்படும். மனதை அமைதியாக வைத்துக்கொள்வது இன்றைய நாளுக்கு மிக அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.