இரண்டாம் திருமணம் முதல் இரண்டு முறை திருமணம் வரை – பிரபலங்களின் சர்ப்ரைஸ் wedding லிஸ்ட்.

0
292
wedding
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளத்தில் பல்வேறு பிரபலங்களின் திருமண செய்திகள்தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது கடந்த ஒரு மாதத்தில் எண்ணற்ற பிரபலங்களின் திருமணம் நடைபெற்று இருக்கிறது அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சமீபத்தில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறி இருந்தது இவர்களைப் போலவே பரிதாபங்கள் கோபி சுதாகர் ராஜா ராணி சீரியல் நடிகர் பாலாஜி தியாகராஜன் குக் வித் கோமாளி புகழ் ஆர் ஜே விக்னேஷ் என்று பல்வேறு நபர்களின் திருமணம் அடுத்தடுத்து நடந்திருக்கிறது.

-விளம்பரம்-

இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் பரிதாபங்கள் கோபி தான் யூடியூப் வாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான நபர்களான கோபி சுதாகர் இருவரில் சுதாகர் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய காதலியை கரம் பிடித்தார் இதை தொடர்ந்து கோபிக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கோபிக்கு யமுனா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது இப்படி ஒரு நிலையில் இவர்களது திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது

- Advertisement -

பிளாக் ஷீப் என்ற youtube சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர் ஜே விக்னேஷ் தற்போது சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் இவர் வெள்ளித்திரைகளையும் சில படங்களில் நடித்து வருகிறார் எப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு ராஜாத்தி என்பவர் உடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது திருமணம் நடைபெற்று இருந்தது இந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது

குக்கு வித் கோமாளி புகழ் திருமணம் சமீபத்தில் தான் முடிந்தது. புகழ் மற்றும் பென்சி ஆகிய கடந்த ஆண்டே தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளராக ராமகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் புகழ் – பென்சி இருவரும் தலைமையில் முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சுயமரியாதை முறையில் திருமணம் மற்றும் இந்து முறை திருமணம் முடித்துள்ள புகழ், இஸ்லாம் முறைப்படியும் திருமணம் முடித்த புகைப்படத்தை பதிவிட்டு ‘என் தந்தையின் அன்பிற்காக புகைப்படத்தை முறை. தாய் அன்பிற்காக ஒருமுறை. என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை (பென்சியா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்) என் மீது அன்பு செலுத்தும் வேறு எந்த அன்பு உள்ளங்களாவது ஆசைப்பட்டால் அவர்களூக்காக இன்னொரு முறையும் தயார் என’ விமர்சங்களுக்கு என்று பதிலடி கொடுத்துள்ளார் .

-விளம்பரம்-

ராஜா ராணி தொடரில் ஹீரோ சரவணனின் தம்பி செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலாஜி தியாகராஜன் சமீபத்தி திடீர் திருமணம் முடித்து இருந்தார்.. இவர் சீரியலில் மட்டுமில்லாமல் குறும்படத்திலும் நடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் யூடியூப், வெப் சீரிஸ் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று பாலாஜி தியாகராஜனுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவருடைய திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். மேலும், ராஜா ராணி 2 குழுவினர் பாலாஜியின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

இவர்கள் திருமணத்தை எல்லாம் விட சமூக வலைதளத்தில் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருவது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி திருமணம் தான் மகாலட்சுமி ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது கடந்த ஆண்டு இவர் சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வரன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்திருந்தார் இதை தொடர்ந்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில் மகாலட்சுமியின் பெயர் மிகவும் டேமேஜ் ஆகி இருந்தது. இந்த பிரச்சனைக்கு பின்னர் மகாலட்சுமி ஈஸ்வர் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். இப்படி ஒரு நிலையில் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்திரனை ஒன்றரை வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மேலும், ரவீந்திரன் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது இதை திருமணத்திற்கு பின்னரே ரவீந்தர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement