அரசியலுக்கு வருகிறாரா சமந்தா !

0
779

தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் சமந்தா.
தமிழ்த்திரையுலகின் முன்னனி நடிகைகளுள் ஒருவரான இவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யா வினை காதலித்து மணக்க இருக்கின்றார்.

ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பிய இருவரது காதலுக்கு தற்போது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சமந்தா திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடிக்க ஆட்சேபனை ஏதுமில்லையென்று நாகார்ஜூனாவின் குடும்பம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் தற்போது மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது.

நடிகை சமந்தா தனது திருமணத்திற்கு பின்னர் அரசியலில் குதிக்க உள்ளாராம்.
இதற்கான வேலைகளை இப்பொழுதிலிருந்தே நாகார்ஜூனாவின் குடும்பம் படுஜோராக அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்களாம்.

வரும் 2019ம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் சமந்தா போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for samantha marriage album

விரைவில் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒரு அழகான இளம் சட்டமன்றஉறுப்பினர் கிடைக்க நம் சார்பாகவும் வாழ்த்துகள்.