ராஜா ராணி சீரியல் செண்பா வெளிநாட்டு மொழி மற்றும் நடனம் கலையை கற்று தேர்ந்தவர் – விபரம் உள்ளே

0
1182
alya

சினிமாவில் கிடைக்கும் பிரபலத்தை விட சின்னத்திரையில் ஒரு சிலருக்கு மிக அதிக பிரபலம் கிடைக்கும். அப்படி பிரபலம் அடைந்தவர்தான் ஆல்யா மானஷா. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பள்ளியில் படிக்கும் போதே பல கலையை கற்று தேர்ந்துள்ளார். ராஜா ராணி சீரியலில் இவர் நடிக்கும் செண்பா கேரக்டருக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

11வது படிக்கும் போது ஜப்பானிய மொழி கற்று இந்திய அளவில் தேர்வு எழுதினார். அந்த தேர்வில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார் ஆல்யா. இதனால் இந்தியா சார்பில் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்களை ஜப்பான் அனுப்பியது இந்தியா அரசு. அந்நாட்டின் கலாசாரத்தை அறிந்து வருவது தான் இதன் நோக்கம்.

இந்த ஜப்பான் ட்ரிப்பில் பல நாட்டு மாணவர்களையும் பார்த்து இன்னும் பல மொழிகள் கற்றுக்கொள்ள நினைத்தார். அதில் மீண்டும் ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார்.

மேலும், இவர் ஜூம்பா நடனம் கற்று அதற்கு ட்ரெய்னிங் கொடுப்பவராகவும் இருந்துள்ளார். மானடா மயிலாட சீசன்-10ல் மானஸ் என்பவருடன் சேர்ந்த கலந்துகொண்டார். இந்த சீசனில் டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு ஒரு காதலர் கிடைத்தார். அவருடன் ஆடிய மானஸ் என்பவருடன் காதல் ஏற்பட்டு தற்போது காதலித்தும் வருகிறார்.

semba

இவர் ஜூலியும் 4 பேரும் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் விழாவிற்கு விஜய் டிவிக்கு சென்றிருந்தார். அங்குதான் இவருக்கு ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குளிர் 100 டிகிரி படத்தில் நடித்த சஞ்சீவ் தான் இந்த சீரியலின் ஹீரோ. இவருக்கு ஆல்யா மிகப்பெரிய ரசிகை. மேலும், சஞ்சீவின் தங்கை ஆல்யாவிடம் ஜும்பா டான்ஸ் கற்றுக்கொள்ள வந்திருந்தார். இதெல்லாம் லின்க் ஆகி ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியல் ரசிகர்களுக்கு ஒரு செண்பாவும் கிடைத்தார்.