உங்களுக்கு நான் செல்ஃபிஷ்ஷா தெரிஞ்சா அதுக்கு என்ன பண்ண முடியும்?” – ‘பிக்பாஸ்’ சுஜா

0
3689
Suja

பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்டிருந்த ‘பிக் பாஸ்’ முடிவடைந்துள்ளது. ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டாலும், ‘பிக் பாஸ்’ வீட்டையும் கமல்ஹாசனையும் நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. ‘பிக் பாஸ்’ போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்த சுஜா, தனது அனுபவங்களை நம்மிடையே பேசினார்.

”உங்களைப் பற்றி…” 

அம்மாவும், அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அக்காவும், நானும் பொண்ணா பொறந்தப்ப அப்பாவுக்கு வருத்தம். அடுத்தது பையனா இருக்கணும்னு ஆசை பட்டுருக்காங்க. ஆனா, மூணாவதும் பொண்ணா பொறந்துட்டதால், என்னோட ஒரு வயசுல என்னோட அப்பா எங்களை விட்டுட்டு போய்டார். பிறகு தாத்தாவே எங்களை வளர்த்தார். ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன். ஒரு ஆறுதல் வார்த்தைக்காக, ஒரு பாராட்டுக்காகப் பல நாள்கள் ஏங்கியிருக்கேன். கடினமா உழைச்சுதான் இந்த இடத்தைப் பிடிச்சிருக்கேன்.’

” ‘பிக் பாஸ்’ வீட்டில் ஏன் அடிக்கடி அழுதுட்டே இருந்தீங்க?” 

”நான் ரொம்ப எமோஷனலான பொண்ணு கிடையாது. ஆனால், ரொம்பவே சென்சிட்டிவ். யாராச்சும் என் குடும்பம் பற்றி கேட்டால், என்னை அறியாமலேயே அழுதுருவேன். ஏன்னா, சின்ன வயசில் அவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிருக்கேன். 24 மணி நேரத்தில், நீங்க பார்க்கிறது ஒரு மணி நேரம்தான். அந்த ஒரு மணி நேரத்தில் நாள் முழுக்க அழுதுட்டிருந்தேன்னு எப்படி தீர்மானிக்கறீங்கன்னே புரியலை.”

”சினேகன் அப்பாவைப் பார்த்ததும் கதறி அழ ஆரம்பிச்சிட்டீங்களே…” 

”என் அப்பாவின் முகமே என் மனசுல பதியலை. என்னுடைய ஒரு வயசில் பிரிஞ்சி போய்ட்டார். சினேகன் சாரின் அப்பாவும் அவரைப் பிரிஞ்சி ரொம்ப நாள் கழிச்சு சந்திச்சார். அப்போ, என் மனசுல என் அப்பாவைப் பார்க்கணுங்கிற எண்ணம் அதிகமா இருந்துச்சு. ஒரு தடவை ‘பிக் பாஸ்’ வீட்டில், ஆர்த்தி மேம் என்கிட்ட, ‘உங்க அப்பாதான் உங்களை விட்டுட்டு போய்ட்டாரே, இனியும் ஏன் அவரை நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க?’னு கேட்டாங்க. அதுக்கு நான், ‘உங்க அம்மாவும்தான் இறந்துட்டாங்க. நீங்க ஏன் இன்னமும் அவங்களை நினைக்கறீங்க?’னு கேட்டேன். ஆயிரம் தப்பு பண்ணியிருந்தாலும் அவர் என் அப்பா. அவரை நான் எங்கேயுமே விட்டுக்கொடுக்க மாட்டேன். இப்போ அவர் உயிரோடு இருக்காரா இல்லையான்னே தெரியாது. ஆனாலும், அவருக்காகக் காத்திருப்பேன்.”

” ‘பிக் பாஸ்’ வீட்டில் உங்களுடைய குளோஸ் ஃப்ரெண்டு யாரு?” 

”ஹரிஷும் கணேஷும் என் சிறந்த நண்பர்கள். ரெண்டு பேருமே ரொம்ப அன்பா பழகுவாங்க. எதார்த்தமா இருப்பாங்க.”

”அந்த வீட்டில் உங்களுக்குப் பிடிச்ச இடம் எது?” 

”என்னுடைய படுக்கையும் கிச்சனும்தான். அந்த கிச்சன்லதான் அன்பா ஆசையா சமைச்சுப் பரிமாறியிருக்கேன்.”

”உங்களைவிட அதிகமா ‘பிக் பாஸ்’ வீட்டில் அழுதவங்க யாரு?” 

”அழறவங்களைப் பார்த்து சிலர் கிண்டல் பண்றாங்க. அவங்க அவ்வளவு வலியை அனுபவிக்கிறதாலதான் அழறாங்கனு யாருமே புரிஞ்சுக்கறதில்லை. அப்படி, தன் சோகத்தை மறைக்க முடியாமல் உண்மையாக அழுதது சினேகன் சார் மட்டும்தான்.”

”நீங்க ரொம்ப செல்ஃபிஷ்ஷா நடந்துகிட்டீங்கனு சொல்றதை எப்படிப் பார்க்கறீங்க?” 

”உங்களுக்கு நான் செல்ஃபிஷ்ஷா தெரிஞ்சா அதுக்கு என்ன பண்ண முடியும்? முழுக்க முழுக்க ஒரு கேம் ஷோ. கேம்னு வந்தால், எல்லாருமே செல்ஃபிஷ்ஷா நடந்துப்பாங்கதான்.”

”எப்போ கல்யாணம்?”

”இப்போதான் ‘பிக் பாஸ்’ வீட்டைவிட்டு வந்திருக்கேன். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. கண்டிப்பா லவ் மேரேஜ்தான். என் லவ்வர், 100 நாள் முடிஞ்சதுக்கு அப்புறமா என்னை வந்துப் பார்த்து, ‘இங்க நீ எப்படி இருக்கியோ அப்படிதான் ‘பிக் பாஸ்’ வீட்டிலும் இருந்தே’னு பாராட்டினார். அவரைத் தவிர யாராலும் என்னைப் புரிஞ்சிக்க முடியாது.”

” ‘பிக் பாஸ்’ பணத்தை என்ன பண்ணுவீங்க?”

”என் அம்மா இதய நோயால் கஷ்டப்பட்டாங்க. அப்போ அவங்க சிகிச்சைக்காக நிறைய பேர் உதவினாங்க. அதேமாதிரி, இதய நோயால் பாதிக்கப்பட்டவங்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுத்து உதவுவேன்.”

”ஐட்டம் டான்சர் என்கிற பெயரை எப்போ முறியடிக்கப்போறீங்க?”

”அதை எப்பவோ ஓவர்கம் பண்ணி வந்துட்டேன். இடையில் வேற வழி இல்லாமதான் சில பாடல்களுக்கு டான்ஸ் ஆடினேன். அப்புறம், சைடு ரோல்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இனி, பேசும் வகையிலான கதாபாத்திரங்களில் என்னைப் பார்க்கலாம்.”

”உங்க எதிர்காலத் திட்டம்…”

”இரண்டு படங்களின் ரிலீஸக்காக வெயிட் பண்றேன். நிச்சயம் சினிமாவில் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பேன்.”