இனி Micro,Nano Sim-லாம் கிடையாது.! இனி போன்லேயே வருது e-Sim.! அப்படினா என்ன.!

0
1966
E-sIM
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக நாம் பயன்படுத்தும் Sim, Mini,Micro,Nano என்று பல்வேறு அளவுகளில் sim-மின் அளவு மாறிக்கொண்டேய வருகிறது. இதற்கு முக்கிய காரணமே செல் போன் நிறுவனங்கள் தங்களின் செல் போனின் அளவுகளை மிகவும் கச்சிதமாக வடிவமைத்து வருவதால்.

-விளம்பரம்-

தற்போது வரும் செல் போன்கள் செல் போனின் அளவை குறைக்க Headphone jack , Memory Card Slot என்று அனைத்தையும் தங்களது செல் போனில் நீக்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் apple நிறுவனம் e-sim என்று தங்களது போனில் அறிமுகம் செய்துள்ளனர்.

இதையும் படியுங்க : Speaker, Port, Button இப்படி எதுவும் இல்லாத ஒரு போன் வந்திருக்குனா நம்புவீங்களா.! 

- Advertisement -

சரி, அது என்ன e-sim? ஒன்னும் இல்லைங்க செல் போன் தயாரிக்கும் போதே அதனுள் ஒரு sim அமைப்பை பொருத்தி விடுகின்றனர். நீங்கள் போன் வாங்கியதும் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் Sim operator களை தொடர்பு கொண்டு சில கேள்விகளுக்கு பதிலளித்தாள் உங்கள் நம்பர் அந்த e-sim மில் activate ஆகிவிடும்.

-விளம்பரம்-

இதன் முக்கிய பயன்பாடே ஒரு வேலை நீங்கள் வெளிநாடு சென்றாலும் நீங்கள் புதிதாக Sim வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் e-sim நம்பரை De-Activate செய்துவிட்டு அந்த நாட்டின் எதாவது ஒரு Network கில் நீங்கள் வேறு நம்பரை மாற்றிக்கொள்ளலாம்.

இனி நீங்கள் அடிக்கடி உங்கள் sim-ஐ கழட்டி மற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. உதாரணமாக நீங்கள் வேறு போன் மாற்றுகிறீர்கள் என்றாலும் நீங்கள் பயன்படுத்திய பழைய போனில் உள்ள e-sim மை Deactivate செய்துவிட்டு புதிய போனில் உள்ள e-sim ல் உங்கள் நம்பரை மாற்றி கொள்ளலாம். இப்போதைக்கு இந்தியாவில் Airtel மற்றும் Jio ஆகிய இரண்டு நிறுவனங்களும் e – sim சேவையை அளித்து வருகிறது. ஆனால், நீங்கள் e-sim கொண்ட போனை வாங்க வேண்டுமே.

Advertisement