நிகழ்ச்சியை விட்டு வெளியேறுங்கள்.! சேரனுக்கு கோரிக்கை வைத்த தேசிய விருது பெற்ற இயக்குனர்.!

0
3275
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜட்டிற்ரான காண டாஸ்க் கொடுக்கப்படும். ஹவுஸ் மேட்ஸ்களின் சமையல் பொருட்களுக்காக இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டாலும், இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்படுபவர்கள் தலைவர் பதிவிற்கு போட்டியிடலாம். அந்த வகையில் இந்த வாரமும் லக்ஸரி பட்ஜட் டாஸ்க் நடத்தப்பட்டது.

-விளம்பரம்-
Cheran-Saravanan

அதன் பின்னர் சரவணன் கூட தான் விஜயகாந்த் போல நடந்து கொள்ளவில்லை என்று கூற, ஆரம்பித்து சண்டை. சேரனின் கேள்விக்கு பதில் கூறிய சரவணன், நீங்கள் ரஜினி கெட் டப்பில் காமெடியாக இருந்தீர்கள் என்று கூறினார். இதே போல இருவரும் வாக்கு வாதம் செய்துகொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் சேரனை தர குறைவாக பேசினார் சரவணன். இந்த நிலையில் பிரபல இயக்குனர் வசந்த பாலன், சேரனுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், அன்புள்ள சேரன் சார் அவர்களுக்கு வணக்கம்!உங்களுக்கு இது கேட்காது என்று தெரியும். காற்றின் ரகசியப் பக்கங்களில் இந்த செய்தி ஊடேறி உங்களைத்தொடும் என்றே நம்புகிறேன்.உங்களின் படங்களின் ரசிகனாய் சொல்கிறேன்.வித்யாகர்வத்துடன் நீங்கள் இருந்த இடம் மிக கம்பீரமானது.பருந்து பறக்கும் வானத்தின் உயரத்தில் சஞ்சரிப்பவர் நீங்கள்.

Image result for vasantha balan cheran

பாரதிகண்ணம்மா,பொற்காலம்,ஆட்டோகிராப் என அற்புதமானஇலக்கியப்படைப்புகள்.திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள்.காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது.

-விளம்பரம்-

இயக்குநர் மகேந்திரன்,இயக்குநர் பாலுகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள்.பிக்பாஸ் அரங்கில் இருப்பவர்களுக்கு உங்களின் உயரம் தெரியாது.நீங்களும் நடிகர் சரவணனும் ஒன்று என்று தான் நினைப்பார்கள்.அறியாமை என்ன செய்ய, உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள்.

இயக்குனர் சங்கப் பதவியில் கௌரவக்குறைவு ஏற்பட்ட போது உடனே அதை விட்டு வெளியேறினீர்கள்.ஆகவே கலைஞன் எந்த நிலையிலும் அவனின் மேன்மையை எந்த கீழ்மைக்கும் உட்படவிடுதல் வேண்டாம் என்று மிகவும் உருக்கமுடன் பதிவிட்டுள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.

Advertisement