சம்பாதிக்கற காசுல 1% இப்படி பண்ணுங்க – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்துள்ள அட்வைஸ்.

0
347
- Advertisement -

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தை ஆந்திராவில் வெளியிடக்கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களை சந்தித்து பேசியிருப்பது தமிழ் நாடு முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. விஜய் தற்போது நடித்து வரும் “வாரிசு” படமானது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கத்தில் இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. இப்பாடல் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

வாரிசு படத்தின் தயாரிப்பு முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் திடீரென ஆந்திராவில் இப்படமானது வெளியிடக்கூடாது என எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை பனையூரில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. கடந்த ஐந்து வருடங்களாக கொரோன மற்றும் தொடர் படபிடிப்பின் காரணமாக பிஸியாக இருந்த விஜய் தற்போது வாரிசு படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது மற்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்.

- Advertisement -

இப்படிப்பட்ட நிலையில் பனையூரில் உள்ள ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளும், ரசிகர்களும் இன்று காலை முதலே கூடத்தொடங்கினர். அடையாள அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகள் மட்டுமே அந்த கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது அந்த பிரியாணியை ஒரு ரசிகர் வலைதளத்தில் ரிவியூ செய்யவே அந்த விடியோவானது சோசியல் மீடியாவில் வைரலாகியது. இந்த சந்திப்பில் முதிலில் மாவட்ட அளவிலான மற்ற தலைவர்களை சந்தித்து பேசிய விஜய் “வாரிசு” படம் வெளியாகும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

மேலும் இந்த சந்திப்பு முடிந்து ரசிகர்களை சந்தித்த விஜய் ரசிகர்களுக்கு பல அறிவுரைகளை கூறினார், முதில் உங்களின் குடும்பத்தை பார்த்து கொள்ளுங்கள் பிறகு மன்ற பணிகளை பார்த்தால் போதும் என்று கூறிய நடிகர் விஜய் படத்தின் போது என்னுடைய உருவ படத்திற்கு பாலாபிஷேகம் எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது, அதற்கு பதிலாக ஏழை எளிய மக்களுக்கு பால், முட்டை, பழங்கள் போன்ற சத்தான உணவுகளை வழங்குகள் என்று அறிவுரை கூறினார்.

-விளம்பரம்-

இதற்கு பிறகு பேசிய விஜய் மக்கள் மற்றத்தின் பொதுசெயலாளர் கூறியதாவது மக்களுக்கு உதவிகள் செய்யாமல் விஜய்யுடன் புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்ளும் மன்ற உறுப்பினர்களுக்கு விஜய் மக்கள் மன்றதில் இடமில்லை என்றும், நற்பணிகளில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விபத்தில் சிக்கி ரத்தம் தேவைப்படும் மக்களுக்கு ரத்ததானம் செய்யும் ஒரே மன்றம் விஜய் மக்கள் மன்றம்தான் என்று செய்தியாளர்களிடம் அந்த சந்திப்பில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ் நாட்டிலேயே ‘வாரிசு’ திரைப்படத்திற்கு குறைவான திரையரங்கு மற்றும் ஆந்திர மாநிலத்தில் ‘வாரிசு’ வெளியிட தடை என்று பல பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையில். நடிகர் விஜய் தற்போது மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் 5 வருடங்கள் கழித்து சந்தித்து பேசிய இந்த நிகழ்வு சினிமா உலகில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு விஜய் மக்கள் மன்றத்தினை அடுத்த கட்டமான அரசியலுக்கு எடுத்து செல்ல ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement