உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அமைக்கபட போகிறது.!

0
1237
- Advertisement -

இந்தியாவில் மொத்தம் 52 சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இருக்கிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தான் அதிக பார்வையாளர்கள்(66,349) அமர்ந்துபார்க்கும் வசதியுள்ளது. இந்நிலையில் இதை விட பிரம்மாண்ட மைதானம் ஒன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமையபெற உள்ளது.

-விளம்பரம்-

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மோடேரா நகரில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் விளங்குகிறது.

- Advertisement -

இந்த மைதானத்தை விட பெரிதான கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் கட்டப்பட்டு வருகிறது. 
அகமதாபாத்தில் கட்டப்பட்டு வரும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் வரை அமர்ந்து போட்டி கண்டுகளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தின் கட்டுமான பணி ரூ.700 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த மைதானத்தில் 3,000 கார்கள், 10 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக தரத்திலான நீச்சல் குளமும் மைதானத்துக்குள்ளே அமைக்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement