அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிட போவது இவர்கள் தான்.! உங்கள் சாய்ஸ் யார்?

0
2308
Housemate

கடந்த சில வாரமாக மிகவும் சலிப்பாக போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும், இந்த வாரம் போட்டியாளர் அனைவர்க்கும் லக்ஸ்சரி பட்ஜட்டிற்கான டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டது. இதில் வனிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த டாஸ்கில் பிக் பாஸ் வீடு ஹோட்டலாக மாறியது, மேலும் போட்டியாளர்களில் சேரன் மேனஜராகவும், மற்ற போட்டியாளர்கள் அனைவரும் பணியாளர்களாகும், பொழுது போக்காளர்களாகவும் நடித்து வந்தனர். இந்த டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வச்சி செய்தார் வனிதா.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் யார் சிறந்த பர்பாமெர் யார் மோசமான பரப்பாமர் என்று முடிவு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளராக ஷெரின், தர்ஷன், மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனால் அடுத்த வார தலைவர் பதவிக்கு இவர்கள் மூவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கபட்டது. அதே போல இந்த வாரம் டாஸ்கை மோசமாக செய்த போட்டியாளர்களில் அபிராமி மற்றும் கஸ்தூரியின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

-விளம்பரம்-
Advertisement