முகெனை தொடர்ந்து இறுதி போட்டிக்கு நுழைந்த அடுத்த போட்டியாளர்.! யார் தெரியுமா?

0
3749
bigg-boss
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 5 போட்டியாளர்களே மீதமுள்ள நிலையில் முகென் மட்டும் ஏற்கனவே இறுதி போட்டிக்கு நேரடியா தகுதி பெற்று இருக்கிறார். அதே போல இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேட் ஆகியிருந்தனர்.

-விளம்பரம்-
Bigg-Boss

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவின் பிக் பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசு தொகையை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகியதால் ரசிகர்கள் பெரும் ஷாக்கடைந்தனர். இதனால் தர்ஷன் ஷெரின் லாஸ்லியா சாண்டி ஆகிய நான்கு பேர் மட்டும் நாமினேஷனில் இருந்து வந்தனர் .

இதையும் பாருங்க: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.! நேராக எங்கு சென்றார் தெரியுமா ?

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சாண்டி காப்பாற்றபட்டதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. கவின் வெளியேறுவதற்கு முன்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவில் வழக்கம்போல கவின் தான் முதலிடத்தில் இருந்து வந்தார். அவரை தொடர்ந்து சாண்டி இரண்டாவது இடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கவின் வெளியேறிய பின்னர் லாஸ்லியாவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே கவின் லாஸ்லியாவிற்கு மிகவும் ஆதரவாக இருந்து வந்தார். அதிலும் கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் சில வாரங்களாக லாஸ்லியாவிற்கு தான் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தார். லாஸ்லியாவிற்காக சாண்டியிடம் கூட சண்டையிட்டார் கவின்.

-விளம்பரம்-
sandy

இருப்பினும் இந்த வாரம் நடைபெற்றுவந்த வாக்கெடுப்பில் சாண்டி இரண்டாமிடத்தில் வந்துள்ளதாகவும் இதனால் அவர் இந்த வார நாமினி எலிமினஷனிலிருந்து காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் தற்போது இறுதிப்போட்டிக்கு செல்லும் இரண்டாவது போட்டியாளராக சாண்டி அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement