ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று(செப்டம்பர் 19) சனிக்கிழமை கோலாகலமாக துவங்கியது. இந்த சீஸனின் முதல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.
முதல் போட்டியே சென்னை மற்றும் மும்பை அணி என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் இந்த சீசன் துவங்கப்பட்டது. அதே போல ஓய்விற்கு பின்னர் தோனி ஆடும் முதல் போட்டி இது என்பதால் தோனி ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள். . இந்த போட்டியில் தோனி கடைசியாக களம் இறங்கி இரண்டு பந்துகளை சந்தித்து ரன் அடிக்கவில்லை என்றாலும் இரண்டு முக்கிய சாதனை படைத்துள்ளார். அ
தாவது இந்த போட்டியில் இரண்டு கேட்சிகளை பிடித்த தோனி ஐபிஎல் போட்டியில் 100 கேட்சிகள் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதே போல ஒரு கேப்டனாக தோனிக்கு இது 100வது வெற்றி இது என்பதும் குறிபிடித்தக்கது. நேற்று சென்னை அணி வெற்றிபெற்றதை விட தோனி 437 நாள் கழித்து ஆடிய முதல் போட்டி இது என்பதால் சென்னை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
நேற்று சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து ட்விட்டரில் பலரும் தோனி குறித்து பதிவுகளை போட்டு வந்தனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பதிவிட்டு ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’என்று பதிவிட்டு சென்னை அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.